அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் திட்டம்.. தமிழக அரசின் புதிய முயற்சி.!  - Seithipunal
Seithipunal


பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு புதியதாக, இந்த வருடம் 10 வகை புதிய விளையாட்டு போட்டிகளை நடத்த, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணைய இணை இயக்குனர் அமுதவல்லியில் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு, புதியதாக 10 வகை விளையாட்டுகள், இந்த வருடம் முதல் அறிமுகம் செய்யபட உள்ளது. 

மாணவர்களுக்கு குத்துச்சண்டை, கடற்கரை கையுந்து, சுண்டாட்டம், ஜூடோ, சிலம்பம், வாள் சண்டை, டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ் மற்றும் வளையப்பந்து உள்ளிட்ட 10 வகை விளையாட்டு போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் நடத்த வேண்டும்.

இதற்காக, வரும், செப்டம்பர் 28 முதல், 30ம் தேதி வரை அவர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. தமிழகத்தின் 38 மாவட்டங்களுக்கு 760 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது.. இதற்கு, அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களும் உரிய முறையில் தயாராக இருக்க வேண்டும்."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new announcement for pet teacher of tn govt school


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->