தமிழகம் || புதிதாக 1,771 அரசு பேருந்துகள்.! போக்குவரத்துக்கு கழகம் முடிவு..!
new bus in tamilnadu govt transport commision order
தமிழ்நாட்டிற்கு புதிய பேருந்துகளை வாங்குவது குறித்து தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பில் மின்சார பேருந்துகளும் அடங்கும். இந்நிலையில், தமிழகத்திற்கு புதிதாக 1,771 அரசு பேருந்துகளை வாங்க போக்குவரத்துத்துறை முடிவு செய்து அதற்கான ஒப்பந்தப்புள்ளியையும் வெளியிட்டுள்ளது.
அந்த ஒப்பந்தத்தின் படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 'பிஎஸ்-4' ரக பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. இந்த ரகத்தில் 1,771 பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேருந்துகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டலங்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளன. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பேருந்துகளும், விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பேருந்துகளும் வழங்கப்பட உள்ளன.
இதே போல், சேலம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், கோவை மண்டலத்திற்கு 115 பேருந்துகளும், கும்பகோணம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், மதுரை மண்டலத்திற்கு 251 பேருந்துகளும், நெல்லை மண்டலத்திற்கு 50 பேருந்துகளும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
new bus in tamilnadu govt transport commision order