புதிதாக திருப்பணிக் குழு நிர்வாகிகள் தேர்வு..ஆணை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா!
New Church Administrators Elected Leader of the Opposition Siva
புதுச்சேரி மாநிலம் வி. மணவெளி ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு புதிதாக திருப்பணிக் குழு நிர்வாகிகள் தேர்வு செய்து அதற்கான ஆணையை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார்.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் சட்டமன்ற தொகுதி வி. மணவெளி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத் துறை மூலம் புதிதாக திருப்பணி குழு அமைக்கப்பட்டு அதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.
இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு ஆலய திருப்பணி குழு நிர்வாகிகளுக்கு அரசின் ஆணையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆலய சிறப்பு அதிகாரி வீரபத்திரன், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், கலியபெருமாள், சபாபதி, கிருஷ்ணமூர்த்தி, பாலகுரு, வாசு, வேலு, ஆறுமுகம், லட்சுமணன்,
மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
New Church Administrators Elected Leader of the Opposition Siva