டாஸ்மாக் ஊழல் - சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிபதி விசாரணை..!!
new justice appointment for investigation of tasmac case
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதனானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், டாஸ்மாக் செயலாளர் மற்றும் டாஸ்மாக் தலைமை கணக்கு அதிகாரி உள்ளிட்டோர் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் மதுபான வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும் விலகிய நிலையில்., நாளை இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.
English Summary
new justice appointment for investigation of tasmac case