ஆசையாக நண்டு சாப்பிட்ட புது பெண்ணிற்கு அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்.! கதறும் கணவன்.!
New married women death ate crab
கரூர் மாவட்டத்திலுள்ள பசுபதி பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் ஒரு பொறியாளர். இவருக்கு கிருபா என்ற பெண்ணுடன் மூன்று மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. தனது மனைவியுடன் நேற்று முன் தினம் அவர் தமிழக கேரள எல்லையான நெட்டா பகுதியில் இருக்கும் தனியார் விடுதி ஒன்றில் வந்து தங்கி உள்ளார்.
அப்போது விடுதியில் அவர்கள் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அந்த உணவில் நண்டு இருந்துள்ளது. அதை கிருபா மிகவும் விரும்பி சாப்பிட்டார். இதை சாப்பிட்டால் சற்று நேரத்தில் கிருபாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்களிடம் இருந்த மருந்தை கிருபா உட்கொண்டுள்ளார்.
ஆனாலும் அவருக்கு மூச்சு திணறல் சரியாகவில்லை. அடுத்ததாக கிருபாவை கணவர் தினேஷ் குமார் சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் மருத்துவமனையில் அளித்த சிகிச்சை பலனின்றி கிருபா உயிரிழந்துள்ளார்.
இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து இறந்து போனார் கிருபாவின் உடலை கைப்பற்றி ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கிருபாவுக்கு விடுதியில் கொடுத்த உணவால் மரணம் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
New married women death ate crab