மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் ஒரு இணையதள முகவரி.! - Seithipunal
Seithipunal


சமீப நாட்களாக தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்கிற குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக மக்கள் தங்களது பகுதியில் உள்ள இணையதள மையங்களையே நாடி வருகின்றனர்.

அரசு தரப்பில் இருந்து ஆதார் எண்ணை இணைப்பதற்காக கடந்த மாதம் 28-ம் தேதி முதல் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் செயல்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், பொதுமக்களொன் தேவைக்காக அரசு சார்பில் https://adhar.tnebltd.org/Aadhaar என்ற இணையதள முகவரியும் வெளியிடப்பட்டது. 

இருப்பினும், நாளுக்கு நாள் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக bit.ly/linkyouraadhar என்ற புதிய இணையதளத்தையும் மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. 

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, இந்த இணையதளத்தில் "ஆதார் அட்டை நகலை பதிவேற்ற வேண்டியது இல்லை. ஆதார் எண்ணை மட்டும் பதிவு செய்தால்போதும்" என்று தெரிவித்துள்ளனர்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new online website allounce electric board for aadhar number link in electric number


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->