#Justin | 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம்..!!
Next 3 hours rain in 10 districts of tamilnadu
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் சென்னையில் இன்று அதிகாலை மிதமான மழை பெய்தது. இதில் எழும்பூர், புரசைவாக்கம், சேத்துப்பட்டு உள்பட பல பகுதிகளில் அதிகாலையில் லேசான மழை பெய்தது.
English Summary
Next 3 hours rain in 10 districts of tamilnadu