நெய்வேலி என்எல்சி தொழிற்சங்க அங்கீகார தேர்தல்..பாரதிய மஸ்தூர் சங்கம் தீவிர வாக்கு சேகரிப்பு!
Neyveli NLC union recognition election Bharatiya Mazdoor Sangh intensifies vote gathering
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் போட்டியிடும் பாரதிய மஸ்தூர் சங்கம் தலைவர் வீர வன்னிய ராஜா, தலைமையில் தொழிலாளர்கள் சுரங்கம் ஒன்றில் தீவிர வாக்கு சேகரித்தார்.
நெய்வேலி என்எல்சி ரகசிய வாக்கெடுப்பு தொழிற்சங்க அங்கிகார தேர்தல் வருகின்ற 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் கடந்த 16ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 17ஆம் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் பாரதிய மஸ்தூர் சங்கத்திற்கு வரிசை எண் 4 என்கிற சின்னம் ஒதுக்கப்பட்டது.
நெய்வேலி நிலக்கரி சுரங்கம் ஒன்றில் முதற்கட்ட வேலை செய்து முடித்துவிட்டு வெளியே வரும் தொழிலாளர்களிடம் பாரதிய மஸ்தூர் சங்கத்திற்க்கு ஒதுக்கப்பட்ட வரிசை 4 உள்ள அட்டையை கையில் காண்பித்தவாறு தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாகபாரதிய மஸ்தூர் சங்கத்தினர் என்எல்சியில் பணி புரியும் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்து வந்தனர். சங்கத்தின் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளி ஊழியர்களின் வாரிசுகளுக்கு அவரவர் கல்வி தகுதிக்கேற்ப நிரந்தர வேலை வாய்ப்பினை மூன்று ஆண்டு பயிற்சி அளித்து நிரந்தரப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
சொசைட்டி தொழிலாளர்களாக இருந்து நிரந்தரப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு w ஜீரோ என்ற பதவியை முற்றிலும் ஒழித்துவிட்டு w3 என்கிற நிலையில் வழங்கிட ஆவணம் செய்வோம்.ஏ எம் சி, நான் ஏ எம் சி, குரிய கால ஒப்பந்த பணி, அவுட்சோர்ஸ் பணிபுரிபவர்களை அனைவரையும் இன் கோசர்வ் தொழிலாளர்களாக மாற்ற வழிவகை செய்யப்படும்.
இன்கோசர்வ் பணியாற்றும் தொழிலாளர்களை விரைவில் நிரந்தர படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.என்எல்சி நிறுவனத்திற்கு வீடு நலம் வழங்கியவர்களுக்கு உறுதியாக வேலை வாய்ப்பினை மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் மூலமாக பேசி நல்ல முடிவினை ஏற்படுத்தி தருவோம் எனவே இந்த பாரதிய மஸ்தூர் சங்கத்திற்கு வரிசையில் நாளில் வாக்களித்து அங்கீகாரம் கிடைக்க வழி செய்தால் உறுதியாக மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்றி கொடுப்போம் என பேசினார்.
சங்க பொதுச் செயலாளர் சகாதேவராவ், சங்கத்தின் பணி தலைவர் அன்பழகன், துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பகுதி செயலாளர் மீனாட்சி சுந்தரம், துணைத் தலைவர் கிருஷ்ணன், எழில் வேந்தன், மைக்கேல் ஜான், பகுதி செயலாளர் வெங்கடாசலம், மணிகண்டன், விக்னேஸ்வரன், அருள் முருகன், வினோத், செந்தில் வேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
Neyveli NLC union recognition election Bharatiya Mazdoor Sangh intensifies vote gathering