ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசிய சம்பவம் - தமிழக டிஜிபிக்கு அதிரடி உத்தரவிட்ட என்ஐஏ.! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டுவீசியதாக ரவுடி கருக்கா வினோத்தை கடந்த மாதம் 25ம் தேதி போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சைதாப்பேட்டை நீதிமன்றம் மூன்று நாட்கள் கருக்கா வினோத்தை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து போலீஸார் அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், நீட் தேர்வு ரத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதற்கு முன்பாக மதுபானக் கடை, தேனாம்பேட்டை காவல் நிலையம், தமிழக பாஜக தலைமை அலுவலகம் என்பதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகை என்று உள்ளிட்டவற்றின் மீது பெட்ரோல் குண்டு வீசியதனால், போலீஸார் ரவுடி கருக்கா வினோத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

இந்த நிலையில், ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஏற்றத்துடன் ரவுடி கருக்கா வினோத் மீது வெடிகுண்டு தயாரித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக கோப்புகளை கேட்டு தமிழக டிஜிபிக்கு என்ஐஏ அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் முழுமையாக கிடைக்கப் பெற்றப் பின் தீவிர விசாரணை நடத்த உள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA officers ask governor house bomb throw case files


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->