பயணியின் உடைமையில் இருந்து 9 கிலோ கஞ்சா பறிமுதல் - திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு.!!
nine kg drugs seized in trichy airport
தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டிற்குள்ளே விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அப்படி இயக்கப்படும் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அவ்வப்போது தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி அதிகாரிகள் பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக திருச்சிக்கு வந்திறங்கிய பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, ஒரு பயணியின் உடைமைகளில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், கஞ்சாவை கடத்தி வந்த பயணியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
nine kg drugs seized in trichy airport