நாமக்கல்லில் பரபரப்பு - ஒன்பதாம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை.!
nineth class student murder in namakkal
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பிரகாஷ் - வனிதா தம்பதியினர். இவர்களது மகன் கவின்ராஜ். இவர் ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு காலை 11.15 மணி அளவில் இடைவேளையின் போது கழிவறைக்கு சென்ற கவின் அங்கேயே மயங்கி கிடந்துள்ளார். இதையறிந்த ஆசிரியர்கள் கவின்ராஜை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே கவின்ராஜ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கவின்ராஜின் உறவினர்கள் ஏராளமானோர் ராசிபுரம் அரசு மருத்துவமனை அருகே திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள், போலீசார் அரசு பள்ளியில் விசாரணை மேற்கொண்டதில் மாணவன் கவின்ராஜிற்கும், வேறொரு மாணவனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளதும், இருவரும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்ட நிலையில் நேற்று காலை பள்ளியின் கழிவறையில் மீண்டும் கவின்ராஜிற்கும், அந்த மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டப்போது அந்த மாணவன் சரமாரியாக தாக்கியதில் கவின்ராஜ் இறந்தது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கவின்ராஜை தாக்கியதாக கூறப்படும் மாணவனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
nineth class student murder in namakkal