இன்று இரவு முதல் வேலை நிறுத்தம்.. என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று இரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களுடன்  கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் கடலூர் கோட்டாட்சியர் பூமா, காவல்துறை அதிகாரிகள், என்எல்சி அதிகாரிகள், ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் என நான்கு தரப்பினர் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் பேச்சு வார்த்தையின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சேகர் "இன்று (ஜூலை 15) இரவு திட்டமிட்டபடி வேலை நிறுத்த அறிவிப்பு கூட்டம் என்எல்சி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெறும். இந்த கூட்டத்தின் முடிவில் வேலை நிறுத்த போராட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதன் அடிப்படையில் ஜீவா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். என்எல்சி நிர்வாகம் சமூக ரீதியிலான முடிவு எடுத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NLC contract labor union announced strike from tonight


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->