ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் வடமாநில பக்தர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் உள்ளது. இத்திருக்கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராமநாதசுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனத்திற்காக வந்த வட மாநில பக்தர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இன்று அதிகாலை ஸ்படி லிங்கம் தரிசனம் செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ் தாஸ் என்ற சன்னியாசி பக்தர் வரிசையில் நின்றிருந்தபோது கூட்டு நெரிசலில் சிக்கி திடீரென மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருக்கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராஜ் தாஸ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் போலீசார் அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமசாமி கோவிலில் வடமாநில பக்தர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

north state youth died in rameshwaram temple


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->