வசமாக சிக்கிய சீமான்! பாய்ந்த வழக்கு! கட்சியின் அங்கீகாரம் ரத்தா? தேர்தல் ஆணையத்தில் புகார்!
NTK Seeman Election Commission
நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
தேர்தல் பொதுக் கூட்டங்களில் கடுமையான, மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது, தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்க தலைவர்களை கொச்சைப்படுத்தி ஏளனமாக பேசுவது மற்றும் மதம், ஜாதி, இனம் என பேசி கலவரத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக அந்த புகார் மனுவில் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெரிக்கல் மேட்டில் பிரசாரத்தில் சீமான், வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், வீசினால் புல் கூட முளைக்காது என பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சீமான் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
English Summary
NTK Seeman Election Commission