அரசு கேபிள் சேனலில் ஆபாசப்படம் - தர்மபுரியில் பரபரப்பு.!
obscene movie telecost in government cable tv channel in dharmapuri
கடந்த பத்து ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சியில், மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்குவதற்காக அரசு கேபிள் டிவி துவங்கப்பட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தனியார் கேபிள் டிவி நிறுவனங்களை விட, அரசு கேபிள் டிவியில் குறைந்த கட்டணத்தில் அதிகமான சேனல்கள் வழங்கப்பட்டன.
ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அரசு கேபிள் டிவியின் தரம் குறைக்கப்பட்டு, முடக்கப்படும் சூழல் உள்ளது. இந்த நிலையில், நேற்று மதியம் தர்மபுரி மாவட்டத்தில் தனியார் உள்ளூர் சேனல் ஒன்றில் ஆபாசப்படம் ஒன்று ஒளிபரப்பானது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து, மக்கள் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் அரசு கேபிள் டிவி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தர்மபுரி அரசு கேபிள் டிவி தாசில்தார் ராஜராஜன் தெரிவித்ததாவது:-
''ஆபாசப்படம் ஒளிபரப்பான தனியார் உள்ளூர் சேனல், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தது. இது குறித்து தகவல் தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட சேனலின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மேலும், தனியார் சேனல் உரிமையாளர் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றுத் தெரிவித்தார்.
English Summary
obscene movie telecost in government cable tv channel in dharmapuri