ஓலா வாடகை வாகனப் பயணிகள் அதிர்ச்சி.! திடீரென ஏற்ப்பட்ட மாற்றம்.!
Ola cab Rent Hike
ஓலா வாடகை வாகனங்களின் கட்டணம் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல் உயர்வு காரணமாக பல்வேறு வாடகை வாகன சேவைகளின் கட்டணம் அதிகரித்து வருகின்றது. ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து பலரும் கண்டனங்கள் எழுப்பிய நிலையில் அடுத்ததாக ஓலா ஆட்டோ மற்றும் கார் சேவைகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பயனாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதற்கு முன் 2.5 கிலோமீட்டர் தூரம் ஓலா ஆட்டோவில் பயணித்தால் ரூபாய் 55 வசூலிக்கப்பட்டு வந்தது தற்போது 2.5 கிலோமீட்டர் க்கு ரூ.110 முதல் ரூ.135 வரை பெறப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வாடகை டாக்ஸிகளின் கட்டண விகிதமானது வரையறைக்குள் இல்லாமல் இருந்தது.
இதனை ஓலா, உபர் போன்ற செயலிகளின் மூலம் கட்டுப்படுத்த முடிந்தது. இதனால், வாடகை ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்டவற்றின் கட்டணம் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. இத்தகைய நிலையில், மீண்டும் வாடகை வாகனங்களின் கட்டண விகிதமானது அதிகரித்துள்ளது அவதியை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.