சென்னையில் பயங்கரம்.! மழைநீர் கால்வாயில் மூதாட்டி எரித்துக்கொலை.! போலீசார் தீவிர விசாரணை.!
Old woman burnt to death in rainwater canal in Chennai
சென்னையில் மழை நீர் கால்வாயில் மூதாட்டி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆண்டார் குப்பம் அரியலூர் சாலை சந்திப்பில் சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் மூதாட்டியின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், பிணமாக கிடந்த மூதாட்டி, மணலி சி.பி.சி.எல். நகரைச் சேர்ந்த வடிவம்மாள்(72) என்பதும், இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் இருப்பது தெரியவந்தது. மேலும் மூதாட்டி நடக்க முடியாத சூழ்நிலையில் இருந்ததாகவும், அவரை யாரோ மழை நீர் கால்வாயில் வைத்து எரித்து கொலை செய்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர். இதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொள்விர் கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Old woman burnt to death in rainwater canal in Chennai