கேரளாவில் ஒமைக்ரான்., இந்தியாவில் மொத்தமாக எத்தனை பேருக்கு.!
OMICRON IN KERALA
ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆங்காங், இஸ்ரேல், போட்ஸ்வானா ஆகிய நாடுகளிலுக்கு பரவி, பின் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 59 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரசால் 38 பேர் (சற்றுமுன் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது உட்பட) பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒமைக்ரான் தொற்றால் இந்தியாவில் கொரோனா 3-வது அலை தாக்க வாய்ப்பு உள்ளதா என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.
இன்று, பிரிட்டன் நாட்டிலிருந்து கேரளாவின் கொச்சி நகருக்கு வந்த நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதேபோல், கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி இத்தாலியில் இருந்து வந்த நபருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் இரண்டு தவணை பைசர் தடுப்பூசி செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், மஹாஸ்டரா மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. அயர்லாந்து நாட்டில் இருந்து மும்பை வழியாக விசாகப்பட்டினம் வந்த 34 வயது நபருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.