சென்னையில் 139 அரசுப்பள்ளிகள் மாநகராட்சி பள்ளிகளாக மாற்றம்.!
one hundrad and thirty nine schools change to chennai corporation schools
சென்னை மாநகராட்சி சார்பில் மழலையர்கள் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை நடத்தப்படுகிறது. இந்த பள்ளிகளில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை நகரின் சில பகுதிகளில் இயங்கி வரும் அரசு பள்ளிகள் கடந்த சில வருடங்களாக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்தாலும் அரசு பள்ளிகளாக செயல்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளை மாநகராட்சி பள்ளிகளுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததன் அடிப்படையில் எத்தனை பள்ளிகள் இதுபோன்று உள்ளன என்று ஆய்வு செய்யப்பட்டது.
அந்த ஆய்வில், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 139 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டு என்று மன்ற கூட் டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தின் படி, 139 அரசு பள்ளிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதையடுத்து அந்த பள்ளிகள் அனைத்தும் "சென்னை பள்ளிகள்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்தப்பள்ளிகளில் படித்த முப்பத்தைந்தாயிரம் மாணவர்கள் தொடர்ந்து கல்வியை தொடர சென்னை மாநகராட்சி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இனிமேல் இந்த பள்ளிகளுக்கு மாநகராட்சி கல்வி துறை மூலம் நிதி ஒதுக்கப்பட்டு வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்படும்.
English Summary
one hundrad and thirty nine schools change to chennai corporation schools