தமிழகத்தில் அமலுக்கு வந்தது புதிய சட்டம்! தடையை மீறினால் 3 மாத சிறை, ரூ.5000 அபராதம்!
Online Game Ban Bill TN Govt April 2023
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், இன்றே தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து, இனி தமிழகத்தில் தடையை மீறி யாரேனும் ரம்மி, போக்கர் விளையாடினால் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.
தண்டனை விவரங்கள் :
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும். மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
ஆன்லைன் சூதாட்டத்தை உருவாக்கி, அதை அளிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். மீண்டும் தவறிழைத்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.
English Summary
Online Game Ban Bill TN Govt April 2023