துரோகி! பெயரைக்கூட சொல்லாமல் போட்டுத்தாக்கிய ஓபிஎஸ்!
OPS Condemn to ADMK eps erode by election loss
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு, அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தான் காரணம் என்று, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அதிமுகவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்ற ஜெயலலிதாவின் புகழுக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது என்று ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துசென்றுள்ள நம்பிக்கை துரோகி எடப்பாடி பழனிசாமி.
அதிமுக 67 ஆயிரம் வாக்குகளில் தோல்வியடைய துரோகியும் அவரது சர்வாதிகார கூட்டம் தான் காரணம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தற்கு எடப்பாடி பழனிசாமியே காரணம்.
துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு மனம்போன போக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுள்ளார்" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
குறிப்பு : ஓபிஎஸ்-ன் இந்த அறிக்கையில் எந்த ஒரு இடத்திலும் எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் அவரைத்தான் குறிப்பிட்டுள்ளார் என்று அவரின் பெயர் குறிப்பிடப்படுகிறது.
English Summary
OPS Condemn to ADMK eps erode by election loss