இந்திய ராணுவத்தை கட்டமைத்த வங்கத்து சிங்கம் நேதாஜி - ஓபிஎஸ் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


இந்திய சுதந்திரத்தை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு அயராது பாடுபட்ட புரட்சி வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்தார்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தவர், குரு கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே ஆசிரியருடன் சண்டை ஏற்பட்டதால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். 

அதன் பின்பு சி.ஆர்.தாஸ் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து ஐ.சி.எஸ். (Indian civil service) பட்டம் பெற்று, லண்டனில் வேலை பார்த்து கொண்டிருந்தார். நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த வேலையை துறந்தார். அந்த வேலையை விட்டு விட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இவர் 1941ஆம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத்ஹிந்த் என்ற ரேடியோ மையத்தை நிறுவி, நாட்டுக்கென தனிக் கொடியை அமைத்து, ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, பெண்களுக்கென தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப் படை என்று பெயரிட்டார். இந்திய புரட்சி நாயகர் சுபாஷ் சந்திர போஸ் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி மறைந்தார்.

இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரின் வீரத்தின்னை போற்றிடும் வகையில் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் 'ஆங்கிலேயருக்கு எதிராக வீரமிகுந்த இளைய சமுதாயத்தை ஒன்றுதிரட்டி, இந்திய இராணுவத்தினை கட்டமைத்து, தாய் நாட்டின் விடுதலைக்காக வீரப் போர் புரிந்த வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளான இன்று அவர்தம் துணிச்சலையும், வீரத்தினையும் நினைவுகூர்ந்து போற்றிடுவோம்' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS wishes to nethaji Subhash Chandra Bose birthday


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->