மக்களே உஷார் - தமிழகம், புதுவைக்கு ஆரஞ்ச் அலர்ட்..!
orange alert ti tamilnadu and puthuchery
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது.
இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "தமிழகத்தில் 11, 12, 13 மற்றும் 16 உள்ளிட்ட தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுவைக்கு மிக கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 13 மற்றும் 16-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
English Summary
orange alert ti tamilnadu and puthuchery