திருவள்ளூர் : போதைப்பொருள் விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் - போலீசார் தகவல்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகத் தலைவர் தமிழ்ச் செல்வம் தலைமை தாங்கிய நிலையில், துணை தலைமை காவலர்கள் முருகேசன் மற்றும் பிரபாகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைமை காவலர் ஏழுமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். 

அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியில் தலைமை காவலர் ஏழுமலை பேசியதாவது, "கஞ்சா மற்றும் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் உட்கொள்வதால் உடல்நிலை சீர்கெடுவது மட்டுமல்லாமல் ஆயுள் காலமும் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

ஆகவே, மாணவர்கள் போதைப் பொருட்கள் பழக்கத்திற்கு ஆளாக கூடாது. படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். யாராவது கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்வதை பார்த்தால் 9444005105 என்ற செல்போன் எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். 

அப்படி, தகவல் தெரிவிப்போருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும். மேலும், அவருடைய பெயரும் ரகசியமாக வைக்கப்படும். என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

othukottai police allounce sanmanam to inform drugs dealers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->