சி பி சி ஐ டி க்கு மாற்றம்!!! பல்லடம் மூவர் கொலை வழக்கு...! 110 நாள் ஆகியும் துப்பு கிடைக்கவில்லை...!
Palladam three murder case No clue found even after 110 days transferred CB CID
திருப்பூர் பல்லடம் வட்டம், அவிநாசி பாளையம் அடுத்த சேமலைக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 75 வயதான தெய்வசிகாமணி என்பவர். இவரது மனைவி 73 வயதான அலமேலு, 46 வயதான மகன் செந்தில்குமார் ஆகியோர் வாழ்ந்து வந்தனர்.

இவர்களை மூன்று மாதங்களுக்கு முன்பு, இரவு சேமலைகவுண்டம்பாளையம் தோட்டத்து வீட்டிற்கு வந்த கும்பல் 3 பேரையும் இரும்பு ராடால் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துவிட்டு 8 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்றனர்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீசார் நடத்தி வந்த விசாரணையில் சிறிதும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்து 110 நாட்களாகியும் துப்பு துலங்காமல் போலீசார் திணறிய நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இனியாவது விரைந்து இந்தக் கொலைச் சம்பவத்துக்கு ஒரு முடிவு காட்டுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
English Summary
Palladam three murder case No clue found even after 110 days transferred CB CID