பாஞ்சாகுளம் திண்பண்ட வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் பதவி மாற்றம்..!
panchakulam snacks case vao change
தென்காசி மாவட்டத்தில் பாஞ்சாகுளம் கிராமத்தில் தலித் மாணவர்களுக்கு திண்பண்டம் வழங்க கூடாது என்று ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளதாக கடைக்காரர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பெட்டிக்கடை உரிமையாளர் மகேஷ்வரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றம்புரிவோரை சில காலத்திற்கு அவ்விடத்தை விட்டு வெளியேற்றும் சட்டப்பிரிவில் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பாஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பனை நியமித்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
panchakulam snacks case vao change