சேரனை வென்ற, முற்காலப் பாண்டியன் செழியன் சேந்தன்…..!
சேரனை வென்ற, முற்காலப் பாண்டியன் செழியன் சேந்தன்…..!
சேரனை வென்ற, முற்காலப் பாண்டியன் செழியன் சேந்தன்…..!
அப்பனைப் போலப் பிள்ளை இருப்பானா? தாத்தாவைப் போலப் பேரன் இருப்பானா?
பட்டி மன்றம் வைத்துப் பேச வேண்டிய செய்தி இது. களப்பிரனை வென்ற கடுங்கோனின் பேரனும், மாறவர்மன் அவனி சூளாமணியின் மகன், தன் பெயருடன் அடைமொழியாக சடையவர்மன் என்ற பெயரைச் சூடிக் கொண்டான்.
சடையன் என்பது, சிவனின் மற்றொரு பெயர். சடையவர்மன் என்பது, முழுக்க சிவனின் ஆதிக்கப் பெயர் தான். அந்தப் பெயரைச் சூட்டிக் கொண்ட, செழியன் சேந்தன், தன் தாத்தா கடுங்கோனின் வீரத்தையும், கொடைப் பண்பையும், தந்தையைப் போல, வானளாவிய படைகளையும், கொண்டவன்.

திருநெல்வேலி மாவட்டம் மலையடிக்குறிச்சி குகைக் கோயிலில் ஒரு கல்வெட்டு உள்ளது. “மாறன் மகன் சேந்தன்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இது அரிய கல்வெட்டு. இது தவிர, சமீபத்தில், மதுரை வைகை ஆற்றின் கரையில், ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டு, இவனது தந்தையான மாறவர்மன் அவனி சூளாமணியின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப் பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தனது தந்தைக்குப் பிறகு, கி.பி.620 முதல் 642 வரை, பாண்டிய நாட்டை ஆட்சி செய்த மன்னன் இவன். சேரனை வென்றதால், வானவன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான்.
மதுரை ராஜா -
English Summary
Pandiya king - Chezhiyan Senthan