பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்!
Pavendar Bharathidasan Death Anniversary
புரட்சிக் கவிஞர் திரு.பாவேந்தர் பாரதிதாசன், அவர்கள் நினைவு தினம்!.
தலைசிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி புதுச்சேரியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.
1937ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த இவர் கதை, திரைக்கதை, வசனம், பாடல், படத்தயாரிப்பு என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார். தான் எழுதியதில் மற்றவர்கள் திருத்தம் செய்வதை விரும்பாதவர்.

பாடப் புத்தகங்களில் அ - அணில் என்று இருந்ததை, அ - அம்மா என்று மாற்றியவர். இலக்கியக் கோலங்கள், இளைஞர் இலக்கியம், குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, குமரகுருபரர் போன்றவை இவரது முக்கியப் படைப்புகள் ஆகும்.
இவர் 1954ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு இவரது பிசிராந்தையார் நாடகத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. தம் எழுச்சிமிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்ட பாரதிதாசன் 72வது வயதில் 1964 ஏப்ரல் 21 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
Pavendar Bharathidasan Death Anniversary