பேனா நினைவுச் சின்னம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் - அமைச்சர் மெய்யநாதன்..!
pen statue at merina beach
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி தமிழுக்கு அளித்த பங்களிப்பினை நினைவுபடுத்தும் வகையில் வங்கக்கடலின் நடுவே 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா' என்ற நினைவுச்சின்னம் அமைக்கப்படவுள்ளது.
இந்த நினைவுச்சின்னம் கடல் மட்டத்தில் இருந்து 42 மீட்டர் உயரத்தில் ரூ.80 கோடியில் அமைக்கப்பட உள்ளது. மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பேனா நினைவுச்சின்னத்தை அமைப்பதற்கு, நிபந்தனைகளுடன் கூடிய முதற் கட்ட அனுமதியை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.
அதன்படி மாநில அரசு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை, இடர் மதிப்பீட்டு அறிக்கை, பொதுமக்களிடம் கருத்து கேட்பு மற்றும் பேனா நினைவுத் திட்டம் தொடர்பான பிற ஆவணங்களையும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்ட பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,
"மெரினா கடற்கரையில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், விரைவில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
pen statue at merina beach