புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் மன்றம் குறை கேட்பு..புகார்களுக்கு உடனடி தீர்வு  - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இன்று நடைபெற்ற மக்கள் மன்றம் குறை கேட்பு நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு புகார்களை பெற்றுக்கொண்டனர்.

இன்று புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் இணைய வழி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு பாஸ்கரன் அவர்கள் தலைமை வகித்தார், காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி கலந்து கொண்டனர் பொதுமக்கள் 45க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்தனர் ,

இந்த விழாவில் கடந்த நவம்பர் மாதம் 95 லட்ச ரூபாயை லாஸ்பேட்டை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் ஆன்லைன் டிரேடிங் ஆப்பிள் இழந்தார் அதில் 55 லட்ச ரூபாய் பணத்தை இணையவழி போலீசார் மீட்டு கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தார்,

 மேலும் 26 பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்கள் கண்டுபிடித்து ஒப்படைக்கப்பட்டது அதன்  மதிப்பு 4,50,000 ஆகும். மேலும் மக்கள் மன்றத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இணைய வழி சம்பந்தமான விழிப்புணர்வும் ஏற்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டது.புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இன்று நடைபெற்ற மக்கள் மன்றம் குறை கேட்பு நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு புகார்களை பெற்றுக்கொண்டனர்.

மூத்த அதிகாரிகள் நேரில் கலந்துகொண்டு 89 புகார்களை பொதுமக்களிடம் கேட்டறிந்து, அதில் 52 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 353 பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பெரும்பாலான புகார்களுக்கு அந்த இடத்திலேயே தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணத்தை உறுதி செய்தனர்.நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதற்காக காவல் நிலைய அதிகாரிகளுக்கு (SHOS) மூத்த அதிகாரிகள் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Peoples Forum Hearing Grievances in Puducherry Police Stations Prompt redressal of complaints


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->