அதிகாலையில் அலறியடித்து ஓடி வந்த பொதுமக்கள் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு.!
peoples outside for lake broke in kanchipuram
அண்மையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில் இன்னும் பல பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் உள்ளது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடுவரப்பட்டு பகுதியிலுள்ள ஏரி நிரம்பி வழிந்தது. அப்பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், 500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பயன் தரும் வகையிலும் இந்த ஏரி உள்ளது.
ஆனால், இந்த ஏரியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென உடைப்பு ஏற்பட்டதனால் சுற்றுப்பட்டு பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. அதுமட்டுமல்லாமல், குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்ததால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இந்த ஏரி தானாக உடைந்ததா? அல்லது மர்மநபர்கள் யாரும் உடைத்தார்களா? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே மழை வெள்ளத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளான நிலையில் தற்போது இந்த ஏரி உடைப்பால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
peoples outside for lake broke in kanchipuram