கோலாகலமாக நடைபெற்ற தென்பெண்ணை ஆற்று திருவிழா - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்று திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழாவின் போது, சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சாமி சிலைகள் ஆற்றங்கரைக்கு கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெறும்.

அதன் படி இந்த ஆண்டு தென்பெண்ணை ஆற்று திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆனால், சமீபத்தில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது வெள்ளநீர் வடிந்த நிலையில், மிகுந்த பாதுகாப்புடன் இன்று தென்பெண்ணை ஆற்று திருவிழா நடைபெற்றுள்ளது.

இந்த திருவிழாவை முன்னிட்டு கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் காலை முதலே நூற்றுக்கும் மேற்பட்ட சாமி சிலைகள் தென்பெண்ணை ஆற்றங்கரைக்கு கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. 

இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதற்கிடையே பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் படகுகள் மூலம் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples participate in thenpennai river festival at cuddalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->