பெரியாரா? பிரபாகரனா? மோதிப்பார்த்து விடலாம்- சீமான் ஆவேசம்!
Periyar? Prabhakaran? Lets go Seeman
பெரியாரா? பிரபாகரனா? என்றாகி விட்டது. இனி மோதி பார்த்து விட வேண்டியது தான் என்று பெரியார் என்ன பேசினார் என்பதை இப்போதும் சொல்கிறேன் எனநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-பெரியார் பற்றிய எனது கருத்துக்கு மெயின் டீலர்கள் போல இருக்கும் என்றும் முக்கியமான நபர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லையே ஏன்? திராவிடர் கழகத் தலைவரான வீரமணி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏன்? இப்படி மெயின் டீலர்கள் அமைதியாக இருக்கும்போது பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் போல அமைப்பை நடத்தி வருபவர்கள் மட்டும் எனக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறார்கள் என குற்றம்சாட்டினார்.
மேலும் தொடர்ந்து பேசிய சீமான் பெரியார் பற்றி நான் பேசிய அனைத்து கருத்துக்களுக்குமே ஆதாரங்கள் உள்ளது என்றும் நீங்கள் தான் வழக்கு போட்டு விட்டீர்களே. அந்த ஆதாரங்களை எல்லாம் நான் கோர்ட்டில் தாக்கல் செய்வேன் என தெரிவித்துள்ள சீமான் கொளத்தூர் மணி நான் மதிக்கும் மனிதர்களில் ஒருவர்என்றும் அவரை அண்ணன் என்றே நான் அழைப்பேன் என்றும் இப்படி நான் உறவு முறையாக நேசிக்கும் நபர்களை வைத்தே எனக்கு எதிராக பேச வைத்திருக்கிறார்கள் என ஆவேசமாக கூறினார்.
பெரியார் பற்றி நான் பேசியது தவறு என்றால் பெரியார் பேசியதும் தவறுதான் என்று கூறியுள்ள சீமான் பெரியாரைப் பற்றி நான் தொடர்ந்து பேசி வருவதால் எங்கள் தலைவர் பிரபாகரனோடு நான் எடுத்த படம் எடிட் செய்யப்பட்டது என்கிற அவதூறை பரப்பி வருகிறார்கள் என்றும் 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரனோடு நான் எடுத்த படம் வெளியாகிவிட்டது என்றும் இப்போது எடிட் செய்து கொடுத்ததாக சொல்லும் நபர் இவ்வளவு நாட்களும் என்ன செய்து கொண்டு இருந்தார் என கேள்வி எழுப்பினர்.
பெரியாரா? பிரபாகரனா? என்றாகி விட்டது. இனி மோதி பார்த்து விட வேண்டியது தான் என்றும் பெரியார் என்ன பேசினார் என்பதை இப்போதும் சொல்கிறேன் என கூறிய சீமான் .பெரியார் ஒரு கன்னடர் அவர் தமிழகத்துக்கு வந்து தமிழ் கற்க வேண்டாம் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கூறினார்.
மேலும் தமிழ் முட்டாள்களின் மொழி என்றெல்லாம் பெரியார் கூறியிருக்கிறார் என்று குறிப்பிட சீமான் இதற்கான ஆதாரங்களை எல்லாம் நான் இப்போது ஏன் வெளியிட வேண்டும் என்றும் வழக்கு விசாரணையின் போது தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு சீமான் கூறினார்.
English Summary
Periyar? Prabhakaran? Lets go Seeman