பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்திக்க வருகிறார் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்திக்க வருகிறார் பிரதமர் மோடி.!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி 9-ந் தேதி வருகை புரிகிறார்.

அதன் பின்னர் முகாமில் கலந்துகொண்டு யானைகள் பராமரிக்கும் முறைகள், அதற்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு பாகன்களிடம் கலந்துரையாட உள்ளார்.

இதைத் தொடர்ந்து ஆஸ்கார் விருது பெற்ற "தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்" ஆவண படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி உள்ளிட்டோரை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பொன்னாடை போர்த்தி கவுரவிக்க உள்ளார். 

பின்னர் முதுமலை வனபகுதியில் உள்ள புலிகளின் பாதுகாப்பு மற்றும் எண்ணிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்க உள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக மைசூரு செல்ல உள்ளார். பிரதமர் வருகையை முன்னிட்டு முதுமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்திக்க வரும் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi visit bomman pelli couples


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->