மது விருந்து நடத்த சிறப்பு உரிமம் வழங்குவதா..? தமிழக அரசுக்கு எதிராக பாமக சார்பில் பொதுநல வழக்கு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மட்டுமே மதுபானம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், சமுதாயக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணையில் ஒரு நாள் நடைபெறும் நிகழ்ச்சிக்கு கூட சிறப்பு அனுமதி பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு உள்துறை செயலாளர் பணிந்திர ரெட்டி இதற்கான அரசாணை வெளியிட்டுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தமிழக முழுவதும் வீதிக்கு வீதி மதுபான கடைகள் திறக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வரும் நிலையில் இனி குடும்ப நிகழ்ச்சி முதல் பொது நிகழ்ச்சி வரை மது அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பாமக வழக்கறிஞர் க.பாலு தமிழக அரசின் இத்தகைய விபரீத முடிவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "குடும்ப நிகழ்ச்சிகள், விளையாட்டு மைதானங்கள், திருமணக்கூடங்களில் மது விருந்து நடத்த தமிழக அரசு சிறப்பு உரிமம் வழங்கியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்ய உள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Balu announced case files against special permission to drink alcohol


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->