மது விருந்துக்கு அனுமதி.."காலையில் அறிவிப்பு; மாலையில் வழக்கு".. களம் இறங்கிய பாமக பாலு..!! - Seithipunal
Seithipunal


திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமூக கூடகங்களில் நடைபெறும் விழாக்களுக்கு மது விருந்து அனுமதிக்கும் அரசின் வீதிகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசின் 1981 மதுபான உரிமை மற்றும் அனுமதி சட்டத்தில் புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. 

தமிழக அரசால் புதிய திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட அந்த அரசாணையில் சிறப்பு அனுமதி பெற மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு என தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தற்பொழுது இந்த அரசாணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாமக வழக்கறிஞரும் சமூக நீதிப் பேரவை தலைவருமான வழக்கறிஞர் க.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இன்று காலை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் "குடும்ப நிகழ்ச்சிகள் விளையாட்டு மைதானங்கள் திருமண கூடங்களில் மது விருந்து நடத்த தமிழக அரசு சிறப்பு உரிமம் வழங்கியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய உள்ளேன்" என தெரிவித்திருந்தார்.

அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்பொழுது பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில் "தமிழ்நாடு அரசின் மதுபான கொள்கை திருத்த விதிகள் பொதுமக்கள் அமைதியாக வாழும் உரிமையை பாதிக்க செய்யும் எனவும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக அறிவித்துள்ள விதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

பாமக வழக்கறிஞர் க.பாலு தாக்கல் செய்துள்ள இந்த பொது நல வழக்கு கூடிய விரைவில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள மதுபான கொள்கை சீர்திருத்த அரசாணைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Balu filed public interest case in ChennaiHC against TNgovt for liquor party


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->