அனைத்திற்கும் திமுகதான் காரணம் - போட்டுடைத்த டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறார். மேலும், இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 1972-ஆம் ஆண்டு மது குறித்து அறியாத தலைமுறைக்கு மதுவை அறிமுகம் செய்தது திமுக தான், மது குறித்த அனைத்து தீமைகளுக்கும் திமுகதான் காரணம். எனவே தமிழக அரசு முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று, இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தாவது, "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்த காரணம் சரியானது அல்ல. வன்னியர்களின் வாக்குகளை மற்றும் பெற்றுக் கொண்ட திமுக இடஒதுக்கீடு மூலம் பிரதிநிதிதுவம் பெறுவதை விரும்பவில்லை. 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின் தங்கி உள்ளதை புள்ளிவிவரங்களின் மூலம் கணித்து வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இருப்பினும், திமுக இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறியதை எங்களால் ஏற்க முடியாது. 

கடந்த 2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புள்ளிவிவர கணக்கெடுப்பில், மாநில யூனியன் பிரதேசங்கள் புள்ளிவிவர கணக்கெடுப்பின் மூலம் முழுமையான விவரங்களை திரட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாநில அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பொய்யான காரணங்கள் கூறுவதை முதல்வர் ஸ்டாலின் தவிர்க்க வேண்டும். பிஹார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் புள்ளி விவரங்களின்படி எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு செல்லும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவறு என்று எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்கவில்லை. 

வன்னியர் உள் இடஒதுக்கீடு வழங்க கோரி மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம். 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் வன்னியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு பொய்யான தகவலை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இதற்காக பாமக எம் எல் ஏக்கள், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சிவசங்கர் மீது உரிமை மீறல் பிரச்சினையை கொண்டுவருவார்கள். 

பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படாமல் இருந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கலாம் என்று உயர்கல்வித்துறை வெளியிட்ட சுற்றரிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது போன்று தவறான தகவல்களை கூறி மக்களை குழப்பி வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று பாமக நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Condmen to DMK Govt for Liquor and Reservation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->