தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க 300 குடும்பங்களை அகற்றும் தமிழக அரசு - டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்!
PMK RAMADOSS condemned to DMK government
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, கடலூர் மாவட்டம் குடுக்கம்பாளையம். பெத்தாங்குப்பம். மலையடி குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் முந்திரி சாகுபடி செய்து வாழ்ந்து வந்த நிலையில், அந்த நிலங்களில் இருந்து காவல்துறை உதவியுடன் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதைக் கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். காவல்துறையினரின் இந்த அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.
சம்பந்தப்பட்ட நிலத்தை ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்காகவே அங்கு வசிக்கும் மக்கள் அகற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதும் மன்னிக்க முடியாதவை.
குடுக்கம்பாளையம். பெத்தாங்குப்பம். மலையடி குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் இப்போதுள்ள நிலைமையே தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு வாழும் மக்களை அகற்றவோ அவர்களின் முந்திரி சாகுபடியை சீர்குலைக்கவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
PMK RAMADOSS condemned to DMK government