பரபரப்பு புகார்! அதிமுக முன்னாள் அமைச்சர் மீது பாய்ந்த வழக்கு!
police case file against karur MR Vijayabaskar election 2024
கரூரில் தேர்தல் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தகாத வார்த்தைகளில் திட்டி, அடிக்க பாய்ந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கரூரில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த காணொளியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், தேர்தல் அதிகாரிகளை சூழ்ந்துகொண்டு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது.
மேலும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் அதிகாரிகளை பார்த்து "ரொம்ப ஓவரா பண்ணிக்கிட்டு இருக்க... நீ வண்டிய எடுயா பார்க்கலாம்... இருடா... ரொம்ப ஓவரா பேசுற... என்னடா... டேய் வண்டியை எடுடா... நீ எவன் கையில ***** கேஸ் போடுறேன்னு எனக்கு தெரியும்... என்றாலெல்லாம் பேசி இருக்கிறார்.
இதனையடுத்து தேர்தல் கண்காணிப்பு குழுவினரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்
English Summary
police case file against karur MR Vijayabaskar election 2024