பரபரப்பு - திண்டுக்கல்லில் பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு.!
police gun shoot on popular rowdy in dindukal
திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ரிச்சர்டு சச்சின் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் இர்ஃபான். இவர் மீது கொலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள நிலையில், இர்ஃபான், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று, இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் இர்பான் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய ரிச்சர்டு சச்சினை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.இந்த நிலையில், ரிச்சர்ட் போலீசாரை கண்டதும் அவர்களைத் தாக்கி விட்டு தப்ப முயற்சி செய்தார்.
இந்தத் தாக்குதலையடுத்து போலீசார் தங்களின் தற்காப்புக்காக ரவுடியின் முழங்காலில் துப்பாக்கியால் சுட்டனர்.இதனால், படுகாயமடைந்த ரிச்சர்டு சச்சினை போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்த்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
police gun shoot on popular rowdy in dindukal