தினதோறும் கஞ்சா! போலீஸ்க்கு வந்த ரகசிய தகவல்! முக்கிய புள்ளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்! - Seithipunal
Seithipunal


பொன்னேரி அருகே கொசத்தலை ஆற்றின் மேம்பாலத்தின் கீழ் தின்தோறும் கஞ்சாவை புகைத்து வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைபொருள்களின் எண்ணிக்கையும் போதைப்பொருள் பயன்படுத்தோர்களின்  எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது . சமீபத்தில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 70 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் கஞ்சா கடத்தல் தொடர்பாக காவல்துறை பலரை கைது செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கஞ்சா பள்ளி மாணவர்களிடையே மிக எளிதாக கிடைக்கின்றது எனது பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் மீஞ்சூர் பகுதியை அடுத்த பள்ளிபுரம் கொசத்தலை ஆற்றின் மேம்பாலத்திற்கு அமர்ந்து வாலிபர்கள் அவர்கள் தினந்தோறும் கஞ்சா அடித்து வருவதாக மீஞ்சூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடிப்படையாகக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர்.

பள்ளிபுரம் கொசத்தலை மேம்பாலத்தில் கஞ்சா புகைத்து கொண்டிருந்த ஐந்து பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் கவுண்டம்பாளையம் பகுதி சேர்ந்த உதயகுமார், கொண்டக்கரை கிராமத்தை சேர்ந்த ஹரி பிரகாஷ், மணலிபுது நகரை சேர்ந்த தேவகுமார், பட்டமந்திரியை சேர்ந்த வினோத் ராஜ், மேலூரை சேர்ந்த விஜய சாரதி ஆகியோர் என்பது முதற்கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது.

அதனையடுத்து போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police have arrested the youth who were smoking ganja


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->