தஞ்சாவூர்: கழிவுநீர் தொட்டியில் பிணமாக கிடந்த தொழிலாளி.! கொலையா? போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் கழிவு நீர் தொட்டியில் தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி பஞ்சமூர்த்தி(55). இவரது மனைவி செல்வி. இந்நிலையில் பஞ்சமூர்த்தி கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்பதால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் பக்கத்து வீட்டு கொல்லைபுரத்தில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. 

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, பக்கத்து வீட்டு கொல்லைப்புறத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியில் பஞ்சமூர்த்தி பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கழிவுநீர் தொட்டியில் இருந்து பஞ்சமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பஞ்சமூர்த்தியின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தொழிலாளி கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigating the worker found dead in the sewage tank in Thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->