#பெரம்பலூர்: ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமியுடன் ஆயுதப்படை காவலர் உல்லாசம்.. பாய்ந்த போக்சோ.! - Seithipunal
Seithipunal


 சிறுவாச்சூர் கிராமத்தில்  17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி  கர்ப்பமாகிய ஆயுதப்படை காவலரை  போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தைச் சார்ந்தவர் பிரபாகரன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில்  இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார் பிரபாகர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான சிறுவாச்சூருக்கு  பிரபாகரன் சென்றபோது அப்போது 17 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்வது கொள்வதாக கூறி கர்ப்பம் ஆக்கியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு  கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்துக் கொண்டிருந்தபோது காவல் நிலையத்திலிருந்து வெளியேறி வேறொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசி டிவியில் பதிவாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தப்பியோடிய காவலர் பிரபாகரனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police man arrested for raping a 17 year old girl and escape from police custody


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->