ரயில் நிலையத்தில் நின்ற வேனில் போலீசார் அதிரடி சோதனை!
police raided van standing at railway station
திண்டுக்கல் ரயில் நிலையத்தின் பார்க்கிங்கில் கடந்த ஒரு வார காலமாக ஆம்னி வேன் ஒன்று நின்றுள்ளது. இந்த வேனை கடந்த நவம்பர் மாதம் 4ம் தேதி பொள்ளாச்சி நெகமத்தை சேர்ந்த முபாரக் அலி என்பவர் நிறுத்திவிட்டு ஒரு வார காலமாக எடுக்காமல் இருந்துள்ளார். இதனை அடுத்து பார்க்கிங் நிறுவனத்தினர் விடைகுண்டு ஏதேனும் இருக்குமா என்ற அச்சத்தில். ஒரு வார காலமாக எடுக்காமல் இருந்த வேன் குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து டிஎஸ்பி கோகுல் கிருஷ்ணன் மற்றும் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் மோப்பநாய், கைரேகை நிபுணர்களுடன் ஒரு மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் வேனில் இருந்து வாட்ச், அயன் பாக்ஸ் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதனை நிறுத்திய முபாரக் அலியை தொடர்பு கொண்டு பேசிய போலீசாரிடம் டெல்லியில் இருப்பதால் இரண்டு தினங்களில் வேனை எடுத்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். இதனை அடுத்து வடக்கு காவல் நிலைய போலீசார் வேலை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல் ரயில் நிலைய பகுதியில் பெரும்ப பரபரப்பை உண்டாக்கியது.
English Summary
police raided van standing at railway station