குமரியில் ஓட்டு சரக்கா? மொத்தமாக அள்ளிய காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இதனை எடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக முழுவதும் அரசு மதுபான கடைகளில் விற்பனை அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 400 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பெட்டி பெட்டியாக பதிக்க வைக்கப்பட்டிருந்த அரசு டாஸ்மாக் மது பாட்டில்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் அடுத்த முள்ளூர்துறை மீனவ கிராமத்தில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் பெட்டி பெட்டியாக பதிக்க வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மது பாட்டில் பகுதி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police seized liquor bottle boxes in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->