இனி கானா பாடல்கள் அது போல இருந்தால் கடுமையான நடவடிக்கை பாயும் - காவல்துறை எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


குற்றசம்பவங்களை ஆதரிக்கும் வகையில் கானா பாடலகள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கானா பாடல்கள் மற்றும் தனி இசை பாடல்களுக்கு இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சமீபமாக சினிமா பாடல்களையும் தாண்டி இவை இரண்டும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்நிலையில், சில கானா பாடல்கள் குற்ற செயல்களை ஊக்குவிப்பதாக குற்றசாட்டு எழுந்தது.

அதனை உறுதி செய்யும் வகையில் சரவடி சரன் என்ற கானா பாடகர் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை ஆதரிக்கும் வகையில் பாடிய பாடல் இணையத்தில் வைரலானது.

இதனை அடுத்து, அவரை கைது செய்து எச்சரித்து அனுப்பிய காவல்துறை அந்த பாடலையும் இணையத்ததில் இருந்து நீக்கியது. இதனை அடுத்து, கானாபாடகர்களுடன் மாதவரம் துணை ஆய்வாளர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது குற்ற செயல்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ள பாடல் வரிகளை தவிர்க்க வேண்டும் எனவும் ஏற்கனவே இணையத்தில் உள்ளதை நீக்கவும் தெரிவித்தனர். மேலும், இதனையும் மீறி இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police Warnig To Gana Singers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->