ரூட் போட்டு கொடுத்த காவலர்.. சிக்கிய பரபரப்பு ஆடியோக்கள்.. தட்டி தூக்கிய காவல்துறை..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கைதான கோவையை சேர்ந்த ரவுடிகள் சுஜி மோகன், அஸ்வின் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கஞ்சா கடத்தல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பந்தைய சாலை காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றும் ஸ்ரீதர் மற்றும் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஆஷிக் ஆகிய இருவரும் கஞ்சா கடத்தலில் உதவியதாக விசாரணை கைதிகள் தெரிவித்தனர்.

காவல்துறையினர் சோதனை உள்ள இடங்கள் குறித்தும், மாற்று வழியில் செல்வது குறித்தும் இவர்கள் இருவரும் ஆலோசனை வழங்கியதாக காவல்துறையினர் விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் ரவுடிகளின் செல்போனை ஆராய்ந்ததில் காவலர் ஸ்ரீதர் மற்றும் வழக்கறிஞர் ஆஷிக்கும், ரவுடிகள் சுஜி மோகன் மற்றும் அஸ்வினிடம் பேசிய செல்போன் ஆடியோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடரந்து காவலர் ஸ்ரீதர் மற்றும் வழக்கறிஞர் ஆஷிக் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Policeman arrested who gave root to the rowdies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->