உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி,பேதி! கல்லூரி கேண்டீனுக்கு சீல்! - Seithipunal
Seithipunal


சென்னையில் இயக்கிவரும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரில் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி,பேதி ஏற்பட்டதால் பாலிடெக்னிக் விடுதி கேண்டீனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி கேண்டீனில் உணவு தரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகவும் இதனை சாப்பிட்டு மாணவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக வாந்தி, பேதி உள்ளிட்ட உடல்நலகோளாறுகள் ஏற்பட்டு வருவதாகவும் தமிழக அரசு உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்துள்ளது.

இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை நிலைய அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் என்.ராஜா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் விடுதிக்கு சென்று அதிரடி சோதனை செய்தனர்.

அதில் கேண்டில் உள்ள உபகரணங்கள் சுகாதாரமின்றி இருந்ததும் உணவு தரமில்லாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உணவு மாதிரிகளை சேகரித்து கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் உடனடியாக கேண்டினை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, கேண்டினில் இருந்த உணவுகளும் இதர பொருட்களும் சுகாதாரமற்று இருந்ததால் சீல் நடவடிக்கை கையாளப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். கேண்டின் உரிமையாளர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Polytechnic Hostel canteen was sealed after the students who ate the food vomited and became ill


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->