பூஞ்சான் நோய் தாக்குதல்: கருகிய வெங்காயப் பயிர்கள்....
Powdery mildew attack scorched onion crops
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பகுதியில் அதிக மழைப்பொழிவு காரணமாகச் சின்ன வெங்காயப் பயிர்கள் நோய் தாக்குதலால் கருகியது, இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒட்டன்சத்திரம், காவேரியம்மாபட்டி, அம்பிளிக்கை ஆகிய பகுதிகளைச் சுற்றி 1000 ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. இதில் கார்த்திகை, மார்கழி மாதம் பயிர்களை நடவு செய்து, பங்குனி மாதம் சின்ன வெங்காயம் அறுவடைக்குத் தயாராகிவிடும்.
இந்நிலையில் பருவநிலைக் காரணமாக, மூடுபனி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வெங்காயப் பயிர்களுக்கு பூஞ்சான் நோய் தாக்கப்பட்டுள்ளது. இந்நோயால் தாக்கப்பட்ட வெங்காயப் பயிர்கள் சிவப்பு நிறமாக மாறி கருகி வருகிறது.
இதனால் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எதிர்பார அளவுக்கு மகசூல் கிடையாது என்பதால் ஏக்கருக்கு 1லட்சம் வரைச் செலவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த ஆண்டில் அதிகப் பனிப்பொழிவு காரணமாகச் சின்ன வெங்காயம் உட்பட அனைத்து விவசாயப் பயிர்களின் விளைச்சலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
English Summary
Powdery mildew attack scorched onion crops