Pre KG, LKG மற்றும் UKG பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்! உறங்குவதற்கு தனியாக நேரம் ஒதுக்கீடு!!
பள்ளி முன்பருவக் கல்வித் திட்டம் நாடு முழுவதும் ஒரே அமைப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி Pre KG, LKG மற்றும் UKGக்கான பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பள்ளி முன்பருவக் கல்வித் திட்டம் நாடு முழுவதும் ஒரே அமைப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் பள்ளி முன்பருவக் கல்விக்கான கலைத்திட்டத்தினை வடிவமைத்து, அதனடிப்படையில் Pre KG, LKG மற்றும் UKGக்கான பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது.

பள்ளி கல்வித்துறையின் ஆணைப்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தமிழ்நாட்டில் பள்ளி முன்பருவக் கல்விக்கான பாடத்திட்டத்தை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரித்துள்ளது. இப்பாடத்திட்டம் www.tnscert.org என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, Pre – KG (2-3 வயது) குழந்தைகளுக்கு காலை 09.30 மணிக்கு வகுப்புகள் தொடங்கி மாலை 4 மணிக்கு முடிகிறது. இதில் மதியம் சாப்பிடுவதற்கு 12.10 – 1.00 மணி வரையும், 01.00 – 3.00 மணி வரை உறங்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் LKG (3-4 வயது), UKG (4-5 வயது) மாணவர்களுக்கும் பள்ளி கால நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி மதியம் 12.10 – 1.00 மணி சாப்பிடுவதற்கும், 01.00 – 3.00 மணி வரை உறங்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


English Summary
Pre KG, LKG & UKG Syllabus